இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயத்தால் விலகிய ஜேமிசன் - மாற்று வீரர் அறிவிப்பு


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயத்தால் விலகிய ஜேமிசன் - மாற்று வீரர் அறிவிப்பு
x

கோப்புப்படம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் (2வது போட்டியில் வெற்றி) இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் மற்றும் 3வது போட்டி மழையால் ரத்தானது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் விலகினார்.

பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் இந்த தொடரில் இருந்து விலகினார். தற்போது அவருக்கான மாற்று வீரரை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் பிளேய்ர் டிக்னெர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story