இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ரிஷப் பண்டுக்கு பதிலாக இந்திய அணியில் தமிழக விக்கெட் கீப்பர் சேர்ப்பு..?


இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ரிஷப் பண்டுக்கு பதிலாக இந்திய அணியில் தமிழக விக்கெட் கீப்பர் சேர்ப்பு..?
x

image courtesy:BCCI

தினத்தந்தி 24 July 2025 5:19 PM IST (Updated: 24 July 2025 5:37 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ரிஷப் பண்டுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தை 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்தபோது பந்து, பேட்டில் லேசாக உரசியபடி அவரது வலது காலை பதம் பார்த்தது. ஷூவை கழற்றி பார்த்தபோது, பாதத்தில் ரத்தம் கசிந்தது. வலியால் துடித்த ரிஷப் பண்ட் (37 ரன்) அத்துடன் வெளியேறினார். காலில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலில் ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6-8 வாரங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக தமிழத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜெகதீசன் இந்திய அணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1 More update

Next Story