கடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு


கடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:twitter/@windiescricket

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

தரோபா,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

பாகிஸ்தான்:சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஹசன் அலி, நசீம் ஷா, அப்ரார் அகமது

வெஸ்ட் இண்டீஸ்: பிரண்டன் கிங், எவின் லூயிஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்

1 More update

Next Story