இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேச அணி முன்னிலை


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேச அணி முன்னிலை
x

image courtesy:ICC

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

காலே,

இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களும், கேப்டன் சாண்டோ 148 ரன்கள் அடித்து அசத்தினர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தாரிந்து ரத்னாயகே தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் அடித்திருந்தது. கமிந்து மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்சய டி சில்வா 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பதும் நிசங்கா 187 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. கமிந்து மெண்டிஸ் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்காளதேசம் தரப்பில் நயீம் ஹசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷாத்மான் இஸ்லாம் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வங்காளதேச அணி இதுவரை 187 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story