ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்

image courtesy:PTI
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கடந்த ஒரு வாரமாக முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ஒரு இடம் குறைந்து 2-வது இடத்துக்கு சரிந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சதம் அடித்ததால் ஏற்றம் கண்ட அவர் காயம் காரணமாக அடுத்த 2 ஆட்டங்களில் ஆடாததால் சறுக்கலை சந்தித்துள்ளார்.
இதனால் 2-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளி) மீண்டும் ‘நம்பர் 1’ இடத்துக்கு முன்னேறினார்.
இந்திய வீரர்களான சுப்மன் கில் 4-வது இடத்திலும், விராட் கோலி 5-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் சரிந்து 9-வது இடத்திலும் உள்ளனர்.
Related Tags :
Next Story






