ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி...!


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி...!
x

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது

துபாய்,

12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். மாத்ரே 4 ரன்னில் அவுட் ஆன நிலையில் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய அரபு அமீரக வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவர் 95 பந்துகளில் 14 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 46 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

1 More update

Next Story