சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா


தினத்தந்தி 9 March 2025 1:42 PM IST (Updated: 9 March 2025 10:34 PM IST)
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

துபாய்,






Live Updates

  • 9 March 2025 3:35 PM IST

    வில்லியம்சன் 11 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

  • 9 March 2025 3:27 PM IST

    அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் குல்தீல் யாதவ் சுழலில் போல்டானார்.

  • 9 March 2025 3:16 PM IST

    2-வது முறையாக கேட்ச் கண்டத்திலிருந்த தப்பித்த ரச்சின் ரவீந்திரா: முதல் கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்ட நிலையில், 2-வது கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்டார்.

  • 9 March 2025 3:15 PM IST

    நியூசிலாந்து அணியின் தொடக்க பார்ட்னர்ஷிப் 57 ரன்கள் அமைத்த நிலையில் பிரிந்தது. வில் யங் 15 ரன்களில் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் ஆட்டமிழந்தார்.

  • 9 March 2025 3:08 PM IST

    ரச்சின் ரவீந்திராவின் கேட்சை தவற விட்ட முகமது ஷமி: 28 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவுக்கு முகமது ஷமி கேட்சை தவறவிட்டார்.

  • 9 March 2025 2:59 PM IST

    5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 37/0 

  • 9 March 2025 2:14 PM IST

    இந்திய அணி மாற்றம் எதுவும் இல்லை. கடைசி 2 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியை பொறுத்த வரை மேட் ஹென்றிக்கு பதிலாக நாதன் சுமித் இடம் பிடித்துள்ளார்.

    இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லதாம், கிளென் பிலிப்ஸ், மிச்செல் பிரெஸ்வெல், சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஒரூர்க், நாதன் சுமித். 

  • 9 March 2025 2:08 PM IST

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.

    இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

1 More update

Next Story