ஐ.பி.எல்.: ஏல வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார் - யார் தெரியுமா..?


ஐ.பி.எல்.: ஏல வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார் - யார் தெரியுமா..?
x

image courtesy:IPL

ஐ.பி.எல். தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 18 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய லீக் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதன் 18-வது சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதனையடுத்து இந்த தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்கள் உட்பட, மொத்தம் 77 வீரர்களை அணிகள் தேர்ந்தெடுக்க இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளார்கள்.

இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் குறித்து இங்கு காணலாம்..!

1. மகேந்திரசிங் தோனி - 2008-ம் ஆண்டு - ரூ. 9.5 கோடி

2. கெவின் பீட்டர்சன்/ பிளிண்டாப் - 2009-ம் ஆண்டு - ரூ. 9.8 கோடி

3. ஷேன் பாண்ட்/ கீரன் பொல்லார்டு - 2010-ம் ஆண்டு - ரூ. 4.8 கோடி

4. கவுதம் கம்பீர் - 2011-ம் ஆண்டு - ரூ. 14.9 கோடி

5. ரவீந்திர ஜடேஜா - 2012-ம் ஆண்டு - ரூ. 12.8 கோடி

6. கிளென் மேக்ஸ்வெல் - 2013-ம் ஆண்டு - ரூ. 6.3 கோடி

7. யுவராஜ் சிங் - 2014-ம் ஆண்டு - ரூ. 14 கோடி

8. யுவராஜ் சிங் - 2015-ம் ஆண்டு - ரூ. 16 கோடி

9. ஷேன் வாட்சன் - 2016-ம் ஆண்டு - ரூ. 9.5 கோடி

10. பென் ஸ்டோக்ஸ் - 2017-ம் ஆண்டு - ரூ. 14.5 கோடி

11. பென் ஸ்டோக்ஸ் - 2018-ம் ஆண்டு - ரூ. 12.5 கோடி

12. ஜெய்தேவ் உடன்கட்/ வருண் சக்ரவர்த்தி - 2019-ம் ஆண்டு - ரூ. 8.4 கோடி

13. பேட் கம்மின்ஸ் - 2020-ம் ஆண்டு - ரூ. 15.5 கோடி

14. கிறிஸ் மோரிஸ் - 2021-ம் ஆண்டு - ரூ. 16.25 கோடி

15. இஷான் கிஷன் - 2022-ம் ஆண்டு - ரூ. 15.25 கோடி

16. சாம் கர்ரன் - 2023-ம் ஆண்டு - ரூ. 18.5 கோடி

17. மிட்செல் ஸ்டார்க் - 2024-ம் ஆண்டு - ரூ. 24.75 கோடி

18. ரிஷப் பண்ட் - 2025-ம் ஆண்டு - ரூ. 27 கோடி

19 ??? - 2026-ம் ஆண்டு

1 More update

Next Story