ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கை - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கை - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
Published on

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் , இலங்கை அணிகள் மோதுகின்றன. துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com