இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்


இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 24 Sept 2025 5:30 AM IST (Updated: 24 Sept 2025 5:30 AM IST)
t-max-icont-min-icon

இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

பிரிஸ்பேன்,

இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முயற்சிக்கும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணி போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story