இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து 230/5

கோப்புப்படம்
இந்தியா முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
பெக்கென்ஹாம்,
இந்தியா- இங்கிலாந்து இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) பெக்கென்ஹாமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே சதமும் (102 ரன்), விஹான் மல்கோத்ரா (67 ரன்), அபிக்யான் குண்டு (90 ரன்), ராகுல் குமார் (85 ரன்), அம்ப்ரிஸ் (70 ரன்) அரைசதம் அடித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது.
Related Tags :
Next Story






