நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 205 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 205 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on

வெல்லிங்டன்,

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் டிக்னர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com