கில் இல்லை.. இங்கிலாந்து அணி பயப்படும் வீரர் இவர்தான் - மஞ்ச்ரேக்கர் பாராட்டு


கில் இல்லை.. இங்கிலாந்து அணி பயப்படும் வீரர் இவர்தான் - மஞ்ச்ரேக்கர் பாராட்டு
x

image courtesy:BCCI

இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் நாளை மறுதினம் தொடங்க உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை மறுதினம் (23-ந் தேதி) தொடங்குகிறது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு ரன் குவித்து வருகிறார். இந்த தொடரில் இதுவரை 425 ரன்கள் குவித்துள்ள அவர் சுப்மன் கில்லுக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்த வீரராக உள்ளார்.

இதனிடையே லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் ரிஷப் பண்டுக்கு இடதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த ஆட்டம் முழுவதும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இதனால் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பணியை கவனித்தார். ஆனால் பண்ட் பேட்டிங் மட்டும் செய்தார். இதனால் 4-வது டெஸ்டில் அவர் ஆடுவாரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் அவர் களமிறங்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து அணி கண்டு பயப்படும் வீரராக ரிஷப் பண்ட் இருந்து வருகிறார் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எந்த சூழ்நிலை வந்தாலும் ரிஷப் பண்டை தன் விருப்பப்படி விளையாட விட வேண்டும். ஏனெனில் அவர் அதற்கு தகுதியானவர். இந்திய நிர்வாகத்திடமிருந்து அவர் அந்த உரிமையை பெற வேண்டும். அப்படி ஒரு உறுதி நிர்வாகத்திடம் இருந்து அவருக்கு கிடைத்தால் நிச்சயம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் அபாயகரமாக மாறும். தற்போதைய அணியில் ரிஷப் பண்ட் 5-வது இடத்தில் களமிறங்கி ஒரு பெரிய வீரராக இருந்து வருகிறார் என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணி கண்டு பயப்படும் ஒரு வீரர் அவர்" என்று கூறினார்.

1 More update

Next Story