ஒருநாள் கிரிக்கெட்: அம்லா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவன்.. 3 இந்திய வீரர்களுக்கு இடம்

அம்லா தேர்வு செய்த அணியில் ஒரே ஒரு பாகிஸ்தான் வீரர் இடம்பெற்றுள்ளார்.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹாஷிம் அம்லா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அவர் தேர்வு செய்த அணியில் இந்தியாவை சேர்ந்த சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி மற்றும் மகேந்திரசிங் தோனி இடம்பெற்றுள்ளனர். அதுபோக 3 தென் ஆப்பிரிக்க வீரர்களும், 2 ஆஸ்திரேலிய வீரர்களும், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் இருந்து தலா ஒரு வீரரும் இடம்பெற்றுள்ளனர்.
இருப்பினும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் ரிக்கி பாண்டிங், யுவராஜ் சிங், ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்களையும் தேர்வு செய்யாமல் அவர் ஆச்சரியமளித்துள்ளார்.
அம்லா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பிளேயிங் லெவன்:-
சச்சின், ஆடம் கில்கிறிஸ்ட், விராட் கோலி, பிரையன் லாரா, ஏபி டி வில்லியர்ஸ், ஜாக் காலிஸ், மகேந்திரசிங் தோனி, முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம் மற்றும் டேல் ஸ்டெயின்.






