ஒருநாள், டி20 தொடர்: வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி

Image Courtesy: @BCBtigers / @windiescricket
வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஆடி வருகிறது.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆப்கானிஸ்தான் - வங்காளதேச அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுகின்றன. இந்த தொடர் யுஏஒ-யில் நடக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் நிறைவடைந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ளதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த தொடர் அக்டோபர் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன. ஒருநாள் போட்டிகள் டாக்காவிலும், டி20 போட்டிகள் சட்டோகிராமிலும் நடக்கின்றன.
Related Tags :
Next Story






