ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற வங்காளதேசம்


ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற வங்காளதேசம்
x

Image Courtesy: @BCBtigers

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.

டாக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடந்தன.

இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் குவித்தது. சவுமியா சர்கார் 91 ரன்னும், சைப் ஹசன் 80 ரன்னும் விளாசினர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 30.1 ஓவர்களில் 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதனால் வங்காளதேச அணி 179 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி வரும் 27ம் தேதி நடக்கிறது.

1 More update

Next Story