ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்


ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: X(Twitter) / File Image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

தரோபா,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

இதன்படி பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரன்டன் கிங், இவின் லீவிஸ், ஷெப்பர்டு, ரூதர்போர்டு, குடகேஷ் மோட்டி, கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப் உள்ளிட்ட வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்புக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் சல்மான் ஆஹா, பாபர் அசாம், சைம் அயூப், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, முகமது நவாஸ், சுபியான் முகீம் என திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. 1991-92-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேரடி ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

அதாவது வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 10 தொடர்களையும் பாகிஸ்தானே கைப்பற்றியுள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story