முதல் டி20 ; இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

இலங்கை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முதல் டி20 ; இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
Published on

கொழும்பு,

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர். பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் ஜனித்த லியாங்கே 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து 129 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்த்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com