முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது
ராவல்பிண்டி,
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சல்மான் ஆகா 105 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story






