ரோகித் சர்மாவிடம் கண் இமை முடியை கொடுத்து மேஜிக் செய்ய வைத்த ரிஷப் பண்ட்.. வைரலாகும் வீடியோ


ரோகித் சர்மாவிடம் கண் இமை முடியை கொடுத்து மேஜிக் செய்ய வைத்த ரிஷப் பண்ட்.. வைரலாகும் வீடியோ
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது ஒருநாள் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.

ராய்ப்பூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி நிர்ணயித்த 359 ரன் என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பீல்டிங்கின்போது எல்லைக்கோட்டிற்கு அருகே நின்ற ரோகித் சர்மா வெளியே இருந்த ரிஷப் பண்ட் உடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ரோகித் சர்மாவும் ரிஷப் பண்டும் இணைந்து ஜாலியாக செய்த மேஜிக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ரிஷப் பண்ட், ரோகித் சர்மாவின் கண் இமை முடியை எடுத்து, ரோகித்தின் கையில் வைத்து, ஏதேனும் வேண்டிக் கொண்டு, ஊதச் சொல்லினார். ரோகித் சர்மாவும் பண்ட் கூறிய படியே செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

1 More update

Next Story