டிராவில் முடிந்த இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட்

image courtesy:twitter/@ICC
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தேர்வு செய்யப்பட்டார்.
காலே,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி 495 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்கள் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 131.2 ஓவர்களில் 485 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 187 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 10 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 4-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து 187 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகும் ரஹிம் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் iன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ 125 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பின்னர் 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. டெஸ்ட் போட்டியில் தனது கடைசி இன்னிங்சில் களமிறங்கிய மேத்யூஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நஜ்மூல் ஹொசைன் சாண்டோ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.






