வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

image courtesy: ICC
இலங்கை - வங்காளதேசம் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.
கொழும்பு,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.
அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 2-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் ஹசரங்கா, சமரவிக்ரமா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்கா, மஹேஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயகே, தில்ஷன் மதுஷங்கா, அசிதா பெர்னாண்டோ, எஷான் மலிங்கா.






