வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: நட்சத்திர வீரர் விலகல்.. இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு

இலங்கை - வங்காளதேச முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
கொழும்பு,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்கிறது. இதில் இலங்கை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியிலிருந்து நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளார். அவரது விலகல் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷனகா,துனித் வெல்லலகே, மஹீஸ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, சாமிக்க கருணாரத்னே,மதீஷா பதிரனா, நுவான் துஷார, பினுர பெர்னாண்டோ மற்றும் எஷான் மலிங்கா.






