டெஸ்ட் கிரிக்கெட்: ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த இந்திய அணி.. யாருக்கெல்லாம் இடம்..?

image courtesy:PTI
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணியில் தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை.
மும்பை,
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம்.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா டெஸ்ட் போட்டிகளில் அசத்திய இந்திய வீரர்களை கொண்டு ஆல்டைம் சிறந்த இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணியில் சச்சின், ராகுல் டிராவிட், சேவாக், கவாஸ்கர் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அந்த அணியில் முன்னாள் கேப்டன்களான மகேந்திரசிங் தோனி மற்றும் ரோகித் சர்மாவை அவர் தேர்வு செய்யவில்லை.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:-
1. சுனில் கவாஸ்கர்
2. வீரேந்திர சேவாக்
3.ராகுல் டிராவிட்
4. சச்சின் தெண்டுல்கர்
5. விராட் கோலி
6. ரிஷப் பண்ட்
7. கபில் தேவ்
8. ரவிச்சந்திரன் அஸ்வின்
9. அனில் கும்ப்ளே
10. ஜஸ்பிரித் பும்ரா
11. ஜாகீர் கான்






