டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்ரீகாந்த் - கவாஸ்கரின் 39 ஆண்டு கால சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால்


டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்ரீகாந்த் - கவாஸ்கரின் 39 ஆண்டு கால சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால்
x

image courtesy:PTI

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல்-ஜெய்ஸ்வால் ஜோடி 91 ரன்கள் அடித்தது.

லீட்ஸ்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. 24.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் குவித்த இந்திய தொடக்க ஜோடி என்ற மாபெரும் சாதனையை கே.எல்.ராகுல்-ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர். இதற்கு முன்னர் 1986-ம் ஆண்டு இந்தியாவின் ஸ்ரீகாந்த்-கவாஸ்கர் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்ததே லீட்ஸ் மைதானத்தில் இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த 39 ஆண்டு கால சாதனையை தகர்த்த கே.எல்.ராகுல்-ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது வரை இந்திய அணி 41 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் 78 ரன்களுடனும், கில் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story