ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?
x
தினத்தந்தி 28 Nov 2025 3:26 PM IST (Updated: 28 Nov 2025 3:27 PM IST)
t-max-icont-min-icon

இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

மும்பை,

8 அணிகள் இடையிலான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) டிசம்பர் 12-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகள் தகுதி சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

இதில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோது. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தகுதி சுற்றின் மூலம் தேர்வாகும் 2 அணிகள் இதில் இடம்பெறும். இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் டிசம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே தலையிலான அந்த அணியில்வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், யுவராஜ் கோஹில், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ.படேல், நமன் புஷ்பக், டி.தீபேஷ், ஹெனில் படேல், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன், ஆரோன் ஜார்ஜ்.

1 More update

Next Story