விராட் கோலி, ரோகித் சர்மாவை மீண்டும் எப்போது இந்திய அணியில் காணலாம்..?


விராட் கோலி, ரோகித் சர்மாவை மீண்டும் எப்போது இந்திய அணியில் காணலாம்..?
x

image courtesy:PTI

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர். இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ளனர். கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

இதனிடையே இந்த மாதம் நடைபெற இருந்த வங்காளதேசத்துக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர் (டி20 மற்றும் ஒருநாள்) ரத்து செய்யப்பட்டது. எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரும் இம்முறை டி20 வடிவில் நடைபெற உள்ளது. மறுபுறம் இந்தியா- வங்காளதேசம் தொடர் ரத்தான நிலையில் அதே அட்டவணையில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. அந்த தொடரும் தற்போது நடைபெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக இவர்களை சர்வதேச களத்தில் விராட் மற்றும் ரோகித்தை எப்போது காண முடியும்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்..!

இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் மீண்டும் களத்தில் காணலாம் என தெரிகிறது.

1 More update

Next Story