தொடரை கைப்பற்றப்போவது யார்..? - 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை - வங்காளதேசம் இன்று மோதல்

Image Courtesy: @OfficialSLC
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
பல்லகலே,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரு ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி பல்லகலேவில் இன்று நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்யும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story






