மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் வீராங்கனை விலகல்


மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் வீராங்கனை விலகல்
x

2-வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

நவிமும்பை,

நவிமும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.குஜராத் அணி தனது 2வது ஆட்டத்தில் டெல்லி அணியுடன் இன்று மோதுகிறது.

இந்த நிலையில், கால் மூட்டு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் குஜராத் ஜெயன்ட்ஸ் விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா நடப்பு போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதனை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story