மகளிர் பிரீமியர் லீக்: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் வெளியீடு

மகளிர் உலகக்கோப்பையில் தொடர் நாடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவை உ.பி. வாரியர்ஸ் அணி விடுவித்துள்ளது.
image courtesy:twitter/@wplt20
image courtesy:twitter/@wplt20
Published on

மும்பை,

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான வீராங்கனைகளின் ஏலம் வருகிற 27-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் ரூ.15 கோடி செலவிடலாம். அத்துடன் 5 வீராங்கனைகளை தக்க வைத்துக் கொள்ளலாம். அதன்படி தக்கவைக்கப்படும் வீராங்கனைகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் விவரம் பின்வருமாறு:-

மும்பை இந்தியன்ஸ்: நாட் சிவெர் பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், அமன்ஜோத் கவுர், கமலினி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி, ஸ்ரேயங்கா பட்டீல்.

குஜராத் ஜெயண்ட்ஸ்: ஆஷ்லி கார்ட்னர், பெத் மூனி,

உ.பி. வாரியர்ஸ்: ஸ்வேதா செராவத்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அனபெல் சுதர்லாண்ட், மரிஜானே காப், நிக்கி பிரசாத்.

இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மகளிர் உலகக்கோப்பையில் தொடர் நாயகியாக ஜொலித்த ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா மற்றும் அலிசா ஹீலி, சோபி எக்லெஸ்டோன், கிரந்தி கவுட் உள்ளிட்டோரை உ.பி. வாரியர்ஸ் விடுவித்துள்ளது.

இதே உலகக்கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்தவரான தென் ஆப்பிரிரிக்காவின் லாரா வோல்வார்ட் மற்றும் ஹர்லீன் தியோல், லிட்ச்பீல்டு, டியான்ட்ரா டோட்டின் ஆகியோரை குஜராத் ஜெயன்ட்சும் கழற்றிவிட்டுள்ளது.

இதே போல் டெல்லி அணியை கடந்த மூன்று சீசனிலும் வழிநடத்திய ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com