பாரீஸ் ஒலிம்பிக்: பெல்ஜியத்திற்கு எதிராக இந்திய ஆக்கி அணி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆக்கி அணி தோல்வியடைந்துள்ளது.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
7-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி ஆட்டத்தில் இந்திய அணி வலுவான பெல்ஜியத்துடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.
இருப்பினும் பிற்பாதி ஆட்டத்தில் பெல்ஜியத்தின் கை ஓங்கியது. அந்த அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இந்திய அணி கடுமையாக போராடியும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.
முழு நேர ஆட்ட முடிவில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது.
Related Tags :
Next Story