பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி
நாளை மறுநாள் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.
பாரீஸ்,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.இதில் மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் கலந்துகொண்டார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை மனு பாக்கர் 580 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதனால் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story