பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா


தினத்தந்தி 1 Aug 2024 2:08 PM IST (Updated: 1 Aug 2024 6:37 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் 7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்று இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை போன்றே, ஸ்வப்னில் குசாலேவும், ரெயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த சீனா தங்கமும், இரண்டாம் இடம் பிடித்த உக்ரைன் வெள்ளிப்பதக்கமும் வென்றன.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story