பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் 6-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
துப்பாக்கி சுடுதல்:-
ஐஸ்வரி தோமர், ஸ்வப்னில் குசாலே (ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) - பகல் 12. 30 மணி.
பேட்மிண்டன்:-
பி.வி. சிந்து (இந்தியா )- கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று) - பகல் 12.50 மணி.
லக்ஷயா சென் (இந்தியா) - ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா) - பிற்பகல் 1.40 மணி.
எச்.எஸ். பிரனாய் (இந்தியா) - டக் பாட் லீ (வியட்நாம்), (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று) - இரவு 11 மணி.
டேபிள் டென்னிஸ்:-
ஸ்ரீஜா அகுலா (இந்தியா) - ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று) - பிற்பகல் 2. 30 மணி.
குத்துச்சண்டை:-
லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) - சன்னிவா ஹாப்ஸ்டட் (நார்வே) (பெண்கள் 75 கிலோ தொடக்க சுற்று) - மாலை 3.50 மணி.
நிஷாந்த் தேவ் (இந்தியா) - ஜோஸ் கேப்ரியல் (ஈகுவடார்) (ஆண்கள் 71 கிலோ 2-வது சுற்று) - நள்ளிரவு 12.34 மணி.
வில்வித்தை:-
தீபிகா குமாரி (இந்தியா) - ரீனா பர்னாட் (எஸ்தோனியா) (பெண்கள் தனிநபர் பிரிவு) - மாலை 3.56 மணி.
தருண்தீப் ராய் (இந்தியா) - டாம் ஹால் (இங்கிலாந்து) (ஆண்கள் தனிநபர் பிரிவு) - இரவு 9.28 மணி.