ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார்.

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) துப்பாக்கி சுடுதலின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்று இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பாராட்டுகள். ஸ்வப்னில் குசாலே தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியதால் பதக்கம் கிடைத்தது. 50 மீட்டர் ரைபிள் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்வப்னில் பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story