சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.

ஷென்சென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா- ஷோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-17, 21-14 என நேர்செட்டில் மலேசியாவின் ஆரோன் சியா- ஷோ வூய் யிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

1 More update

Next Story