ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்‌சயா சென் தோல்வி

நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்‌சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

குமாமோட்டோ,

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீரர் லக்சயா சென், 13-ம் நிலை வீரரான கென்டா நிஷிமோட்டோவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.

77 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் நிஷிமோட்டோவிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com