உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி


உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி
x

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஞான தத்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கவுகாத்தி,

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ஞான தத்து 15-12 மற்றும் 15-13 என்ற நேர்செட்டில் காரெட் டானை (அமெரிக்கா) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா 15-8 மற்றும் 15-5 என்ற நேர்செட்டில் லி யுயான் சன்னை (சீனா) எளிதில் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 15-10 மற்றும் 15-7 என்ற நேர்செட்டில் காரின் டீயை (மலேசியா) வீழ்த்தி காலிறுதியை எட்டினார்.

1 More update

Next Story