14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story