மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்


மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
x

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.| temperature in Tamil Nadu has gradually started increasing since last February.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 27-ந்தேதி வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு அதாவது 25-ந்தேதி வரையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும். இதனால், ஒருசில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம். நேற்று மதியம் 12.45 மணியுடன் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி, கோவில்பட்டியில் 3 சென்டி மீட்டர், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் 2 சென்டி மீட்டர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

நேற்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதன்படி, கரூரில் 103.1 டிகிரி, மதுரை மற்றும் திருச்சியில் 102.3 டிகிரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 102.2 டிகிரி, ஈரோடு 101.8 டிகிரி, வேலூர் 101.4 டிகிரி, தருமபுரி மற்றும் திருத்தணியில் 100.4 டிகிரி என 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story