சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையின் சில பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது .
இந்த நிலையில் மேற்கு திசையில் இருந்து மேகக்கூட்டங்கள் சென்னை, புறநகர் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் மழை குன்றத்தூர், பொன்னேரி மற்றும் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், கீழ்பாக்கம், சிந்தாரிப்பேட்டை, புதுப்பேட்டை, அண்ணா சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், மேடவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, கூடுவாஞ்சேரி வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.