சென்னை, புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை


சென்னை, புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை
x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை நகரில் எழும்பூர், சென்ட்ரல், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் மழை வேகமெடுத்துள்ளது. அண்ணா சாலை, கிண்டி, சைதாப்போட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


Next Story