பிரபாசை முந்தினார் நடிகர் அல்லு அர்ஜுன் சம்பளம் ரூ.125 கோடி


பிரபாசை முந்தினார் நடிகர் அல்லு அர்ஜுன் சம்பளம் ரூ.125 கோடி
x

தெலுங்கு நடிகர்கள் சமீபகாலமாக சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார்கள். தெலுங்கு படங்கள் தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் பான் இந்தியா படங்களாக வெளியாவதால் அவர்கள் கூடுதல் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அதிக சம்பளம் பெறும் தெலுங்கு நடிகர்கள் பட்டியலில் பிரபாஸ் முதல் இடத்தில் இருந்தார்.

இவர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வாங்கினார். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியதே சம்பள உயர்வுக்கு காரணம். பிரபாஸ் நடித்த தெலுங்கு படங்களை அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் சம்பளத்தை அல்லு அர்ஜுன் முறியடித்து இருக்கிறார். இந்தி படமொன்றில் நடிக்க அல்லு அர்ஜுனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு ரூ.125 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்துக்கு பிறகுதான் அல்லு அர்ஜுன் மார்க்கெட் கூடியது. தற்போது புஷ்பா 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் அந்த படத்தில் நடித்துள்ள ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.


Next Story