ரஜினியுடன் நடிப்பது பெருமை -நடிகை தமன்னா


ரஜினியுடன் நடிப்பது பெருமை -நடிகை தமன்னா
x

ரஜினியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமன்னா நடிப்பில் கடந்த வருடம் நான்கு படங்கள் வெளியாகி அதில் மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. ஆனாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் படத்திலும் நடிக்கிறார். இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவை கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. என்னை போன்ற எத்தனையோ நடிகைகள் அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கையில் ஜெயிலர் படத்தில் அவரோடு நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

படப்பிடிப்பில் அவரோடு இணைந்து நடிக்கும் அந்த நாளுக்காக மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன். எனது இத்தனை நாள் கனவு தற்போது நிறைவேறி விட்டது. இதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்தேன். மீண்டும் போலா ஷங்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அவரோடு பாடல் காட்சிகளில் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவும் நான் காத்திருக்கிறேன்.

இந்தியில் போல் சுடியா, மலையாளத்தில் பாந்திரா படங்களிலும் நடிக்கிறேன் என்றார்.

1 More update

Next Story