அஜித்குமாருக்கு வில்லனாக தனுஷ்?


அஜித்குமாருக்கு வில்லனாக தனுஷ்?
x

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லன் வேடத்தில் தனுசை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புவதாகவும், தனுசை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.

முன்னணி கதாநாயகர்கள் மற்ற நடிகர்கள் படங்களில் வில்லன்களாக நடிக்க முன் வருகிறார்கள். விஜய்சேதுபதி அதிக படங்களில் வில்லனாக நடித்து விட்டார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா வில்லனாக வந்து போனார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க விஷாலை அணுகினர். அவர் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் நடிக்க இயலாது என்று கூறி விட்டார். அவருக்கு பதில் அர்ஜுன் நடிக்கிறார். இந்த நிலையில் தனுசுக்கும் வில்லன் வாய்ப்பு வந்துள்ளது. 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் தனுஷ் வில்லனாக நடித்து இருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லன் வேடத்தில் தனுசை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புவதாகவும், தனுசை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. தனுஷ் சம்மதிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக வருகிறார்.


Next Story