பெண்களை இம்சிப்பது கேவலம்; வலைத்தள அவதூறால் மெஹ்ரின் வருத்தம்


பெண்களை இம்சிப்பது கேவலம்; வலைத்தள அவதூறால் மெஹ்ரின் வருத்தம்
x

என்னை அவதூறு செய்யும் நோக்கில் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிடுவது வேதனையாக இருக்கிறது என்று நடிகை மெஹ்ரின் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் மூலம் அறிமுகமான மெஹ்ரின் தொடர்ந்து தனுசுடன் 'பட்டாஸ்', 'நோட்டா' ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது மெஹ்ரின் நடிப்பில் 'சுல்தான் ஆப் டெல்லி' என்ற வெப் தொடர் ஓ.டி.டி. தளத்தில் ரிலீசாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் மெஹ்ரின் ஆபாசமாக நடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தும் கண்டித்தும் வலைத்தளத்தில் அவதூறு பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது மெஹ்ரினுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மெஹ்ரின் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சுல்தான் ஆப் டெல்லி வெப் தொடரில் இடம்பெற்றுள்ள பலாத்கார மானபங்க காட்சியை ஆபாச காட்சியாக வர்ணித்து என்னை அவதூறு செய்யும் நோக்கில் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிடுவது வேதனையாக இருக்கிறது.

நடிப்பை கலையாக, தொழிலாக பார்க்கும் நடிகைகள் கதையின் ஒரு பாகமாக ஆபாச காட்சிகள் இருந்தால் அதில் நடிக்கத்தான் வேண்டும். ஆபாச காட்சிகளும் நடிப்பில் ஒரு பாகம்தான்.

உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் தொடரில் உள்ளது. ஆனால் என்னை மோசமாக அவதூறு செய்கின்றனர். அப்படி பேசுபவர்களுக்கு சகோதரிகள், மகள்கள் இருப்பார்கள். பெண்களை இம்சிப்பது, அவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்வது ஒரு கேவலமான செயல்'' என்று கூறியுள்ளார்.


Next Story