உடற்பயிற்சியில் மாரடைப்பு... பிரபல நடிகர் மரணம்


உடற்பயிற்சியில் மாரடைப்பு... பிரபல நடிகர் மரணம்
x

இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான சித்தாந்த் வீர் சூர்யவன்சி உடற்பயிற்சி செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி. இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் அவர் உடற்பயிற்சி செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. மரணம் அடைந்த சித்தாந்துக்கு அலிசியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சித்தாந்த் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், இந்தி நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். உடற்பயிற்சியில் நடிகர்கள் தொடர்ந்து பலியாவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்தாந்த் மறைவு குறித்து இந்தி டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரி கூறும்போது, ''உடற்பயிற்சி செய்யும்போது நிகழும் மரணங்களுக்கு முடிவு கட்டவேண்டும். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் ஜிம்மில் மணிக்கணிக்கில் உடற்பயிற்சிகள் செய்வது தவறானது'' என்று கூறியுள்ளார்.


Next Story