மீண்டும் அஜித்குமார் ஜோடியாக தமன்னா?


மீண்டும் அஜித்குமார் ஜோடியாக தமன்னா?
x

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 'விடா முயற்சி' படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர். பொன்னியின் செல்வன் படத்தில் பிரபலமானதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக கூறப்பட்டது. விஜய்யின் லியோ பட வாய்ப்பும் இந்த படத்தினாலேயே அவருக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது விடா முயற்சி படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தமன்னா ஆடிய நடனத்துக்கு வரவேற்பு கிடைத்தது. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் கவர்ச்சியாக நடித்தும் பேசப்பட்டார்

இதனாலேயே திரிஷாவுக்கு பதில் தமன்னாவை நாயகியாக்க படக்குழுவினர் விரும்புவதாக கூறப்படுகிறது. கதாநாயகி யார் என்பதை அடுத்த சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர். ஏற்கனவே 2014-ல் வெளியான வீரம் படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story