வெளியானது லியோ பட டிரெய்லர்..!! - ரசிகர்கள் உற்சாகம்


வெளியானது லியோ பட டிரெய்லர்..!! - ரசிகர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 5 Oct 2023 1:10 PM GMT (Updated: 5 Oct 2023 1:15 PM GMT)

நடிகர் விஜய்யின் லியோ பட டிரெய்லர் இன்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரல் ஆனது.

இந்த சூழலில் லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியானது. டிரெய்லர் வெளியான திரையரங்குகளிலும், சமூக வலைதளங்களிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




Next Story