ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன்


ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன்
x

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்படார். சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு வைத்து இருந்ததாக பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மோசடி பணத்தில் சுகேஷ் ரூ.7 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்ததாகவும் சுகேஷின் குற்றப்பின்னணி தெரிந்தே அவருடன் ஜாக்குலின் பழகி வந்ததாகவும் அமலாக்கத்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஜாக்குலினுக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்து வந்தனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவியது. இந்த வழக்கு விசாரணை நேற்று பாட்டியாலா கோர்ட்டில் நடந்தபோது ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜரானார்.

அப்போது தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஜாக்குலின் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷைலேந்தர் மாலிக் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.50 ஆயிரம் பிணைத்தொகையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story